Wednesday, May 8, 2013

காத்திருக்கிறேன்...

நாம் ஒன்றாக
நடந்த பாதையில், 
நான் தனியாக 
இப்போது 
கடந்தவை பல!!


மனதின் பக்கங்களில்
 நீ 
நிறைந்திருப்பதை போல,
 நான்கு திசைகளிலும்
 நீயே நிறைந்து,
 என் 
பிரபஞ்சமாகி கொண்டிருக்கிறாய்!!

உன்னிடம் பகிர 
ஓராயிரம் விஷயம்
 சேர்கின்றன,
 தினமும்!!
கனவில் நித்தமும்
 உன்னிடம் கூற
 நேரமே போதுவதில்லை!!


 ஒரு முறையேனும் 
வந்து விடு!!

Tuesday, April 30, 2013

மறந்துவிட்டேன் உன்னை...


உன்னை மறந்ததாகவே
நினைக்கிறேன்!!
கனவில் உனை கண்டு,
நிஜத்தில் கண்ணீர் திரள்வதை
நான் உணராத வரை!!


உன்னை 
மறக்க சொல்லி கட்டாயபடுத்தும் 
என் மூளையின் கட்டளையை 
அழகாய் மறக்க செய்கிறது,
 என் மனது!!
 கண்மூடும் ஒவ்வொரு வேளையும் 
உன்னை 
கண் முன் நிறுத்தி!!


உன்னை 
நான் மறந்து விட்டதாய்
 போடும் நாடகத்தில்,
 நான் வென்று கொண்டிருக்கிறேன்!!
 எனக்கு நான் 
அன்னியம் ஆகி கொண்டே!!!


"எங்கேயாவது  
வெளியே செல்லலாம்
என நான் சொல்லும் போது எல்லாம்,
 அது நான் 
"உன்னை மறக்க செய்யும் முயற்சியா
இல்லை
"உன்னை சந்திக்க செய்யும் முயற்சியா"
என தெரிவதே இல்லை, 
எனக்கு!!